50 ஆண்டு கால சினிமா பயணத்தையொட்டி, நடிகர் ரஜினி காந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்த 50-வது ஆண்டில் அவரது நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் நாளை (ஆக.14) வெளியாகவுள்ளது. தற்போது ரஜினிக்கு பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினியின் நெருங்கிய நண்பராக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “இன்று திரையுலகில் 50 ஆண்டை நிறைவு செய்கிறார் எனது நண்பர் ரஜினிகாந்த். இந்த பொன் விழாவுக்கு ஏற்றவாறு ‘கூலி’ திரைப்படம் உலகளாவிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பதிவிடன் ‘கூலி’ படக்குழுவினர் அனைவரையும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.