ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி நடித்து வரும் நாடகம், ‘ரகசியம் பரம ரகசியம்’. இதன் கதையை வெங்கட் எழுதியுள்ளார். முதன்முதலாக 1975-ம் ஆண்டு ‘யுஏஏ’ குழுவால் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகத்தை இப்போது வரை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தார். இப்போதுவரை அதே கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் 50-வது ஆண்டை முன்னிட்டு இந்த நாடகம் சமீபத்தில் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காந்த் கலந்து கொண்டு, நாடகக் குழுவினரை வாழ்த்தினார்.