நாட்டில் உள்ள 50 முன்னணி சுற்றுலா தலங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு சுற்றுலாத்துறை கட்டமைப்பை மேம்படுத்தவும், பயணங்களை எளிதாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் அமைக்கவும் முத்ரா கடன் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. முக்கிய சுற்றுலா தளங்களில் அத்தியாவசிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான நிலங்களை வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா பயணிகளை கவர இ-விசாக்கள் வழங்குவது, விசா கட்டணம் தள்ளுபடி போன்றவற்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெறுவதை ஊக்குவிக்க, மருத்துவ சுற்றுலா திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக விசா விதிமுறைகள் தளர்த்தப்படும்.