நியூயார்க்: போர்ப்ஸ் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலரை நெருங்கி உள்ளது. ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு சுமார் 8.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாக தகவல்.
இதன் மூலம் உலக பணக்காரர்களில் 500 பில்லியன் டாலரை நெருங்கிய முதல் நபர் என மஸ்க் அறியப்படுகிறார். இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு 1.25 மணி அளவில் அவரது சொத்து மதிப்பு 499.5 பில்லியன் டாலர்கள். இது போர்ப்ஸ் உலக பணக்காரர்களின் நிகழ்நேர பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.