சென்னை: பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள அவரது சிலைக்கு நேற்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக ெபாதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, என்.கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, மயிலை த.வேலு, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, டாக்டர் எழிலன், முன்னாள் எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி, தென்மேற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தி.நகர் லயன் பி.சக்திவேல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
‘பயணத்தை தொடர்கிறோம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “பெரியார் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டு 51 ஆண்டுகளாகின்றன; நாம் அவரது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்”” என்று பதிவிட்டுள்ளார்.
The post 51வது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.