தமிழ்நாடு அணிக்கு 234 ரன்கள் இலக்கு
ஜாம்ஷெட்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் 185 ரன்களிலும், தமிழ்நாடு 106 ரன்களிலும் ஆட்டமிழந்தது. 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜார்க்கண்ட் அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 48.4 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர் 5, அஜித் ராம் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.