டெல்லி: டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; 3 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 50 இடங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 50 இடங்களை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூடுதலாக 500 சுகாதார நிலையங்கள் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். ஒன்றிய அமைச்சர் ஜெ.பி.நட்டா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்று கூறினார்.
The post 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கோரிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.