டெல்லி: இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மொத்தமாக 6000க்கும் அதிகமான மாத்திரைகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் இன்று தடை விதித்துள்ளது. இன்று காலையில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதில் தலைவலி, சளிக்கு பயன்படுத்தும் சாதாரண மாத்திரைகள் கூட உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. மாத்திரைகள் தடை செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் மேலும் சில மாத்திரைகள் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.
தடை பிக்ஸ்ட் -டோஸ் காம்பினேஷன் ( fixed-dose combination-FDC) என்று மருத்துவ துறையில் ஒரு வாக்கியம் உள்ளது. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மருத்துவ பொருட்களை கலந்து உருவாக்கப்படும் மாத்திரைகள் எல்லாம் இந்த வகைக்குள் வரும். இந்த நிலையில் இதில் உள்ள 328 வகை கலவையில் உருவாக்கப்பட்ட மாத்திரை உற்பத்திக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
எத்தனை மாத்திரை
இதனால் நிறைய மாத்திரை உற்பத்திகள் மொத்தமாக நிறுத்தப்படும். இதனால் 6000க்கும் அதிகமான மாத்திரை பிராண்டுகள் மொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளது. சேரிடான், டாக்சிம் ஏஇசட், பண்டர்ம் பிளஸ் கிரீம் உள்ளிட்ட பிரபலமான மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது. சாதாரண தலைவலி, காய்ச்சல் மாத்திரைகள் கூட தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த 328 வகை மாத்திரை உற்பத்தி கலவைகளும் மிகவும் தவறான முறையில் உருவாக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மனிதர்களின் உடலுக்கு நிறைய பிரச்சனை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத்திரைகளை உயிருக்கு கேடு விளைவிக்கும் மாத்திரைகள் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இன்னும் நீக்க வாய்ப்புள்ளது
இன்று காலையில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதனால் இதை உருவாக்கவோ, பயன்படுத்தவோ, சோதனை செய்யவோ கூடாது. இன்னும் சில நாட்களில் மேலும் சில மாத்திரைகள் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.