சென்னை:ஜார்கண்ட்டை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு தோல்பட்டை எலும்பில் ஆஸ்டியாய்டு ஆஸ்டியோமா என அடையாளப்படுத்தப்படும் புற்றுநோய் கட்டி இருந்துள்ளது. இந்த கட்டி 5 மிமீ X 5 மிமீ என்ற அளவில் சிறுவனின் மேற்புற கை எலும்பின் தண்டுக்குள் ஆழமான இடத்தில் இருந்தது. இவர் மேல் சிகிச்சைக்காக எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது டாக்டர்கள் புற்றுநோய் கட்டியை அகற்ற பர் டவுன் என ஒரு நுட்பமான மருத்துவ செயல்முறையை மேற்கொள்ள திட்டமிட்டு வெற்றிகரமாக அகற்றினர்.
இதுகுறித்து டாக்டர் விஜய் ஆனந்த் கூறியதாவது: 30 நிமிடங்கள் என்ற காலஅளவிற்குள் இந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடுத்தநாளே இச்சிறுவன் அவனது இயல்பான செயல்பாடுகளை மேற்கொள்ள முடிந்தது. எவ்வித சிரமங்களோ, கட்டுப்பாடுகளோ இன்றி வலியில்லாத வாழ்க்கையைசிறுவனால் வாழ முடியும் என்றார்.
The post 7 வயது சிறுவனின் அரிதான எலும்பு புற்றுநோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை: எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.