புதுடெல்லி: நாடு முன்னேற இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வரும் நிலையில், அவருக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். “எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம் என்பதல்ல. எவ்வளவு திறம்படச் செய்கிறோம்” என்பதே முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாராயணமூர்த்தியின் பிடிவாதம்… – நாடு முன்னேற இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த இந்திய வர்த்தக சபை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியிலும் அவர் இதே கருத்தை தெரிவித்துள்ளார். “இந்தியர்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. அவர்கள் எண்ணங்களை உயர்வாக வைக்க வேண்டும். நாம் கடினமாக உழைக்கவில்லை என்றால் யார் உழைப்பார்கள்?” என்றெல்லாம் கேட்டுள்ளார்.