புதுடெல்லி: 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது வாழ்த்துச் செய்தியில், 8"நமது 76வது குடியரசு தினத்தில் நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நமது சுதந்திர நூற்றாண்டின் இறுதி காலாண்டில் நுழையும் வேளையில், 2047 ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியாவை நனவாக்க உறுதியுடன் உழைப்போம். முதலில் தேசம் என்ற நமது அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் நங்கூரமிடுவோம்.