சென்னை: "தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு முழுப்பாதுகாப்பு கொடுக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்கள் பயன்படுத்திய 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்களாவர். இச்சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.