புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்ய, 8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்கள், சலுகைகளை தீர்மானிக்க 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.7,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500-ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டது. அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.2,50,000 ஆகவும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.