நாகப்பட்டினம்: வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையால் நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று 8-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் ரூ.16 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கவும், கடலில் அதிக மழை பெய்யவும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகுகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையினர் கடந்த 11-ம் தேதி தடை விதித்தனர்.