பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விரிவாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 80 இந்திய விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டன, ஆனால் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அச்சுறுத்தலை திறம்பட அவற்றை செயலிழக்கச் செய்தது. இந்தியாவுக்கு உடனடி பதிலடி கொடுத்த பாகிஸ்தான் விமானப்படை மற்றும் அதன் தலைவரை பாராட்டுகிறேன். இந்தியாவின் திட்டங்கள் குறித்து ஆயுதப்படைகளுக்கு முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தகவல்கள் கிடைத்ததன.
நாங்கள் ரபேல் உட்பட ஐந்து விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். மேலும் இரண்டு இந்திய டிரோன்களையும் சுட்டு வீழ்த்தினோம். எங்கள் ஆயுதப் படைகள் 24 மணி நேரமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தன. நமது நாட்டை பாதுகாக்கத் தயாராக இருந்தன. பஹல்காம் தாக்குதல் குறித்து வெளிப்படையான சர்வதேச விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருந்தது. இந்தியா ஒத்துழைப்புக்கு பதிலாக அத்துமீறல் மூலம் பதிலளித்துள்ளது’ என்றார்.
The post 80 இந்திய விமானங்கள் தாக்குதல் பாகிஸ்தான் பிரதமர் சொல்கிறார் appeared first on Dinakaran.