ஒன்பது ஆண்டுகளாக கர்ப்பமடைவதற்காக நான் முயற்சித்து வரும் நிலையில், இந்த செய்தி என்னை உற்சாகமடைய செய்தது. ஆனால், முன்பு நடந்தது போன்றே இம்முறையும் நடந்துவிடுமோ என்ற பயமும் எனக்கு ஏற்பட்டது. முன்பும் இந்த சிகிச்சையின்போது எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, நான் ஆவலுடன் இருந்தேன். ஆனால், அதன்பின் கருக்கலைந்து நான் ஏமாற்றம் அடைந்தேன். அதுகுறித்து நினைத்தாலே பெரும் அச்சம் ஏற்படுகிறது.