சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் வரவால் தொழில்நுட்ப துறை ஆட்டம் கண்டுள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு உலகில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. அதோடு, செயற்கை நுண்ணறிவு துறையில், தாமே தான் நம்பர் ஒன் என்று கருதும் அமெரிக்காவின் இறுமாப்பையும் அசைத்துள்ளது. சீன செயலியின் சவாலை அமெரிக்க நிறுவனங்கள் சமாளிக்குமா?