வாஷிங்டன்: ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை ஏஐ டெக்னால்ஜி ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் என ஏகப்பட்ட துறைகளில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்தே வருகிறது. ஏஐ வருகையால் மக்களுக்கு மிகப் பெரிய பலன் உள்ளது என்ற வாதம் வைக்கப்பட்டாலும் கூட, முன்பு பல மணி நேரம் எடுத்துச் செய்த வேலைகளைக் கூட இப்போது சில நொடிகளில் செய்து முடித்துவிட முடிகிறது. இந்த ஏஐ டூல்களை பலரும் பல விதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பல்வேறு துறைகளில் வேலையிழப்பு அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை ஏஐ மட்டுப்படுத்திவிடும் என்ற அபாயகரமான ஆய்வு முடிவுகளும் நிபுணர்களின் சொல்கின்றன.
இந்நிலையில், சாட்ஜிபிடி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி அவர், “தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இது தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளார். அதாவது, ஏஐ வளர்ச்சியின் காரணமாக, மிகவும் சுலபமாக போலி வீடியோ, ஆடியோ அல்லது புகைப்படங்கள் உருவாக்க முடிகிறது. இது சில சமயங்களில் உண்மையான நபர்கள் போன்றே தோன்றும்.
யார் நம்மை அழைக்கிறார்கள், யாரிடம் நாம் பேசுகிறோம் என்பதையே நம்ப முடியாத நிலைக்கு நாம் செல்லக் கூடும் என்று கூறியுள்ளார். வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். இதன் மூலம், அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்ற விஷயங்கள் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே, ஏஐ வளர்ச்சியுடன் இணைந்து, அதனைத் தவறாக பயன்படுத்தும் முயற்சிகளையும் கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
The post AI-யால் இனி வங்கிகளுக்கே பாதுகாப்பு இருக்காது.. பணம் திருடப்படலாம்: சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.