லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 300+ ரன்கள் என்ற முன்னிலையை பெற்றுள்ளது இந்திய அணி. இதற்கு கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையிலான அபார கூட்டணி முக்கிய காரணமாக அமைந்தது. இருவரும் அடுத்தடுத்து சதம் கடந்து அசத்தினர்.
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து, இந்தியா இந்த போட்டியில் முதலில் பேட் செய்தது. இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் முறையே 471 (இந்தியா) மற்றும் 465 (இங்கிலாந்து) ரன்கள் எடுத்தான்.