புதுடெல்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம், பொருளாதாரம் தவறாக கையாளப்பட்டுள்ளதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் விருதுநகர் தொகுதி எம்பியுமான மாணிக்கம் தாக்கூர், "மோடி அரசின் இபிஎஃப்ஓ விதிகள் கொடூரமானவை. ஓய்வூதியர்களும் வேலை இழந்தவர்களும் தங்கள் சொந்த சேமிப்பைப் பெறுவதில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இது மக்களின் வாழ்வை அழிக்கும் செயல். மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும்.