கண்ணால் காண்பதும் பொய்… காதால் கேட்பதும் பொய். எதை உறுதிப்படுத்த முன்னோர்கள் இதை சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இப்போது எல்லாமே சந்தேகமாக உள்ளது. தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியை கண்டு பயம் ஏற்படுகிறது. சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் என மின்னணு ஊடகங்களில் வரும் காட்சிகள், செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை அறிய முடியவில்லை.
ஒருவரை போலவே நடை, உடை, பாவனைகளுடன் ஒருவரை உருவாக்கி, சமூக வலைதளங்களில் கூடு விட்டுகூடு பாய விட்டால்… அதன் விளைவுகள் எப்படி இருக்கும். உண்மையிலேயே தெரிந்தவர் பேசுவது போல் பேசி நம்ப வைத்து மோசடிகள் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உருவாகி உள்ளன.