வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) இயக்குநராக தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான காஷ் பட்டேலை நியமித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
இதுகுறித்து தனது சமூகவலை தளத்தில் கூறியிருப்பதாவது, “எஃப்பிஐ-ன் அடுத்த இயக்குநராக காஷ்யப் ‘காஷ்’ பட்டேல் பணியாற்றுவார் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். காஷ் ஒரு சிறந்த வழக்கறிஞர், துப்பறிவாளர் மற்றும் ஊழலை அம்பலப்படுத்துவதற்கும், நீதியை பாதுகாப்பதற்கும், அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கும் தனது வாழ்நாளை செலவிட்ட அமெரிக்கா ஃபர்ட்ஸ் போராளி.