ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம் சொத்து மதிப்பீட்டுக்கு மிகவும் உதவியாக உள்ளதாக நில மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட சொத்தின் சந்தை மதிப்பை மதிப்பிட்டு, அதன் மதிப்பு குறித்த துல்லியமான அறிக்கையை வழங்கும் தொழில்முறை நிபுணர்கள் மதிப்பீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் தனிநபர்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்காக சொத்து மதிப்பு, காப்பீடு, வரிவிதிப்பு, விற்பனை, அடமானக் கடன்கள் போன்ற பல்வேறு சேவைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு, புவியியல் தகவல் முறைமை (Geographic Information System – GIS) என்ற தொழில்நுட்பம் உறுதுணையாக உள்ளதாக மதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.