சென்னை: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மெகா ஏலத்துக்கு பிறகு 10 ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார்? என்ற முழு விவரத்தை பார்ப்போம்.
மெகா ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில் 10 அணிகளும் 46 வீரர்களை தக்கவைத்தனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 பேர் கொண்ட அணியை உருவாக்க வேண்டும். அந்த வகையில் 10 அணிகளிலும் மொத்தம் 250 வீரர்கள் இடம் பெறும் வாய்ப்பு நிலவியது. ஏற்கெனவே 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு உள்ளதால் மெகா ஏலத்தில் 204 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர்.