ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினத்தைக் கொண் டாடும் சூழலில், வனத்தின் ஆதார உயிரினமான யானைகளின் வலசைப் பாதைகளைப் பாதுகாக்க தனி சட்டம் இயற்றப் பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் என்ற இரு பெரும் பிரிவுகளாக யானைகள் பிரிக்கப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ள நிலை யில், ஏறத்தாழ 30 ஆயிரம் யானைகள் இந்தியா வில்தான் உள்ளன. இவற்றில் 50 சதவீதத்துக் கும் மேற்பட்ட யானைகள் தமிழ்நாடு, கர்நாடக, கேரள மாநிலங்களை இருப்பிடங்களாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, அதிக எண்ணிக்கை யிலான வாழும் பகுதியாக நீலகிரி உயிர்க்கோள காப்பகம் திகழ்கிறது. யுனெஸ்கோவால் இந்தியாவில் முதல் உயிர்க்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டது இதுதான்.
கோவை முதல் மன்னார்க்காடு, அமைதிப் பள்ளத்தாக்கு, வயநாடு, முதுமலை, பந்திப் பூர், நாகர்கொளே, சத்தியமங்கலம், கொள்ளே கால் பகுதிகளில் யானைகள் உலாவுகின்றன. தக்கான பீடபூமியான பந்திப்பூர், வயநாடு, நாகர்கொளேவிலிருந்து சமவெளியான கோவை, சத்தியமங்கலம் பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கான யானைகள் வலசை செல்கின்றன. இதன் முக்கிய வழித்தடமாக நீலகிரி மாவட்டம் மசினகுடி அமைந்துள்ளது. இந்த வழித்தடம் சுருங்கி, வலசைப் பாதையில் செல்ல முடியாத நிலை உருவாகும்போதுதான், மக்களின் வசிப்பிடங்களை நோக்கி யானைகள் திரும்புகின்றன. இதனால் யானை-மனித மோதல் கடுமையாகிறது. குறிப்பாக, கூடலூர் வட்டத்தில் யானைகளால் மனிதர்களும், மனிதர்களால் யானைகளும் கொல்லப்படுவது தொடர்கிறது.
வலசைப் பாதையை இழக்கும் யானைகள், உணவு, தண்ணீருக்காக தவிப்பது மட்டுமின்றி, வேறு கூட்டத்துடன் இணை சேருதலும் பாதிக்கப்பட்டு, பன்முக மரபணு மாற்றம் தடுக்கப்பட்டு, ஆரோக்கியமான யானைக் கூட்டம் உருவாவதும் தடைபடுகிறது. வலசைப் பாதையில் கடந்த 20 ஆண்டுகளாக மெல்ல மெல்ல அதிகரித்துவிட்ட கட்டிடங்களும், அனுமதியற்ற சுற்றுலாவும் இந்தப் பேருயிரை சிரமத்துக்குள்ளாக்குகின்றன.
வன உயிரின வாழ்விடங்களில் கேளிக்கை சுற்றுலாக்கள் நடத்தப்படுகின்றன. `ஃபயர் கேம்ப் (தீயை மூட்டி, சுற்றி அமர்ந்து கொண்டாடுவது), வானவேடிக்கை, இசை நிகழ்ச்சியுடன் இரவைக் கழிக்கலாம்` என விளம்பரங்கள் செய்யப்பட்டும், இரவு சஃபாரி செல்லலாம் எனக் கூறியும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றனர். இந்த நெறியற்ற சுற்றுலா, வன விலங்குகளைப் பாதிக்கிறது. முறைப்படி பதிவு செய்யப்படாத சுற்றுலா வளர்ந்துகொண்டே வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி மலைப் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்கள், ஹோட்டல் களை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே சமயம், சில கட்டிடங்கள் மீது மட்டும் நடவடிக்கை என்ற அளவில் இல்லாமல், யானைகளைப் பாதுகாக்க முழுமையான நடவடிக்கைகள் அவசியம் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
‘ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் க.காளிதாசன் `இந்து தமிழ்` செய்தியாளர்களிடம் கூறிய தாவது: யானைகளைப் பாது காக்க வேண்டுமென வலியுறுத்துவது பரிதா பக் குரல் அல்ல. உயிர்ச் சூழலின் ஆதார உயிரி னம் யானைகள்தான். எனவே, எதிர்கால சந்ததிகளுக்கு உயிர்ச் சூழலை பத்திரமாக விட்டுச் செல்ல வேண்டுமெனில், யானை களைப் பாதுகாப்பது அவசியம். தமிழகத்தைப் பொறுத்தவரை, மேற் குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகளின் வலசைப் பாதைகள் பல்லாண்டு காலமாக பயன்பாட்டில் இருந் திருக்கின்றன. ஆனால், நமது சுயநலத்துக்காக அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம். பழக்கப்பட்ட வலசைப் பாதைகள் மறிக்கப் படும்போது, புதிய இடத்தை நோக்கி யானை கள் நகர்வதே யானை-மனித மோதலுக்கு காரணமா கிறது. உரிய அனுமதி பெறாத, கேளிக்கைச் சுற் றுலா என்ற பெயரில் நடத்தப் படும் சுற்றுலாக்களை தடை செய்ய வேண்டும். அனுமதி பெற்றாலும், கட்டுப்பாடு களுடன் நடத்த வேண் டும். இதனால் வேலை யிழக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத் துக்கு உதவ அரசு முன்வர வேண்டும். வனத் துறையே, உரிய நெறிமுறைகளுடன் காட்டுயிர் சுற்றுலா நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்த மல்ல. எல்லா உயிரினங்களுக்குமானதுதான். இதை உணர்ந்து, உயிரினங்களில் பேருயிரான யானைகளைப் பாதுகாக்க, சர்வதேச யானைகள் தின நாளான இன்று உறுதியேற்போம்.
கட்டிடங்கள் கட்ட கட்டுப்பாடு விதிக்க வேண்டும்
‘கோவை வனக்கோட்டம் உள்ளிட்ட அனைத்து வனக் கோட்டங்களிலும், யானைகளின் வலசைப் பாதைகளைப் பாதுகாக்க வேண்டும். வலசைப் பாதைகள் தனியார் நிலங்கள் வழியே செல்லும்போது, அங்கு கட்டிடங்களைக் கட்ட கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அவற்றின் பாதைகளைப் பாதுகாத்தால்தான், விவசாயிகளும், அவர்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களும் தப்பும். யானைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. யானைகளின் வலசைப் பாதையை மறுவரையறை செய்ய வேண்டும். தற்போதுள்ள வனக் கட்டுப்பாட்டு அமைப்புகளும், ஆணையங்களும் அதிகாரமில்லாதவையாக உள்ளன. எனவே, யானைகளின் வலசைப் பாதைகளைப் பாதுகாக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசை எதிர்பார்க்காமல், மாநில அரசே தனி சட்டம் இயற்ற முன்வர வேண்டும். சுற்றுலா மூலம் பொருளாதார வளர்ச்சி என்பதைக் காட்டிலும், இயற்கையும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அனைத்துத் தரப்பினருக்கும் உணர்த்த வேண்டும். இதற்காக விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஈடுபடுவது அவசியம்’ என்று ‘ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் க.காளிதாசன் மேலும் தெரிவித்தார்.