மேற்கு வங்கத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
அரசியலில் உருவெடுத்தது எப்படி?
213 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக மேற்கு வங்க முதல்வராக பொறுப்பெற்றுள்ளார் 66 வயதான மம்தா பானர்ஜி. பாஜக கொடுத்த கடும் சவால்களுக்கு மத்தியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார் மம்தா பானர்ஜி.
மம்தா யார்?
மம்தா பானர்ஜி யார்? அரசியல் களத்தில் செல்வாக்கு மிக்கவராக அவர் உருவெடுத்தது எப்படி? என்பது பற்றி காண்போம். 1955-ம் ஆண்டு கொல்கத்தாவின், அஸ்ரா பகுதியில் பிறந்த மம்தா பானர்ஜி சிறு வயது முதலே வறுமையின் பிடியில்தான் வளர்ந்தார். தனது15-வது வயதிலேயே1970-ல் காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் நடத்திய பல ஆர்ப்பாட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
மிக சிறிய வயதில் பெருமை
கட்சியில் உழைத்து படிப்படியாக முன்னேறிய மம்தா பானர்ஜி, 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளராக உயர்ந்தார்.
முதன்முதலாக 1984-ல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றத்தில் நுழைந்தவர் என்ற பெருமையை பெற்றார்.
எதிர்க்கட்சியாக செயல்பட்டார்
1989-ம் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவிய மம்தா, 1991-ல் வெற்றி பெற்றார். மனக்கசப்பு காரணமாக 1997-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து வெளியேறிய மம்தா, 1998-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. கட்சி தொடங்கிய அதே ஆண்டில் நடந்த தேர்தலில் கணிசமான இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக உயர்ந்தார்.
இடதுசாரி கோட்டையை தகர்த்த மம்தா
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இடதுசாரிகள் கோட்டையாக திகழ்ந்த மேற்கு வங்கத்தில் வென்று கம்பீரமாக ஆட்சியை பிடிதத்தார் மம்தா பானர்ஜி. அன்றில் இருந்து மேற்கு வங்கத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் மம்தா பானர்ஜி. அதன் பின்னர் 2016 தேர்தல், தற்போதைய 2021 தேர்தல் என அனைத்திலும் வெற்றி வாகை சூடினார் மம்தா.
ரயில்வே அமைச்சர்
பல்வேறு இடங்களில் ஆட்சியை பிடித்த பாஜகவால் நாடளுமன்ற தேர்தலில் கூட மேற்கு வங்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. மம்தா பானர்ஜி இரண்டு முறை ரயில்வே அமைச்சராக இருந்துள்ளார். 1991-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் வெற்றியை ருசித்து வந்த மம்தா, இந்த முறை நந்திகிராம் தொகுதியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளார்.
போராட்ட குணம்
இறுதியாக இளங்கலை வரலாறு முடித்துள்ள மம்தா பானர்ஜி, சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். இது தவிர பேச்சு திறன், கவிதை, ஓவியம் வரைதலிலும் மம்தா சிறந்து விளங்கியுள்ளார். எளிமை, போராட்ட குணம், மக்களுடன் ஒன்றி இருப்பது இருப்பது போன்றவற்றால் இந்த நிலையை எட்டியுள்ளார் மம்தா. தற்போது இந்தியாவில் இருக்கும் ஒரே பெண் முதல்வர் என்ற பெருமையும் மம்தாவிடம் தான் உள்ளது. மேற்கு வங்கத்தின் ஜெயலலிதா என்று மக்களால் போற்றப்படும் மம்தா பானர்ஜி முன்பை விட சிறந்த நள்ளா ட்சியை கொடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
MAMTA SIMPLICITY FIGHTING STORY