‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்துவிட்டு தனுஷுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக இருந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைப் பார்த்துவிட்டு ரெட் ஜெயன்ட் நிறுவனம், மிகவும் நன்றாக இருப்பதாக தனியாக வரலாமே என்று தேதியை மாற்றி இருப்பதாக திரையுலகினர் தெரிவித்து வருகிறார்கள்.