மலையாள சினிமாவில் ‘மார்கோ’வின் தாக்கத்தால் வசூலில் பின்னடைவு கண்டாலும், திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ரைஃபிள் கிளப்’ (Rifle Club) இப்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இந்திய அளவிலான டாப் 10 பட்டியலில் முக்கிய இடம் பிடித்து கவனம் ஈர்த்துள்ளது.
ஆஷிக் அபு இயக்கத்தில் திலீஷ் போத்தன், அனுராக் காஷ்யப், சுரபி லக்‌ஷ்மி, தர்ஷனா ராஜேந்திரன் என நட்சத்திர பட்டாளமே அணிவகுத்துள்ள ‘ரைஃபிள் கிளப்’ திரைப்படம் பக்கா ஆக்‌ஷன் காமெடி பேக்கேஜ் விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.