ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா விரைகிறார். புதன்கிழமை அதிகாலை அவர் இந்தியா வந்தடைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.