இஸ்ரேல் படைகள் தாக்குதலில் கொல்லப்பட்ட அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டவர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இறுதியில் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் உருவாக்கியது.
இந்த நிலையில் மேற்கு கரையில் செய்தி சேகரிக்க சென்ற அல் ஜசீராவில் பணியாற்றி வரும் பாலஸ்தீன பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டது சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த அல் ஜசீரா பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லேவின் இறுதிச் சடங்கு மற்றும் அடக்கம் நடைபெற்றது.
இதன்போது ஷிரின் அபு அக்லா சவப்பெட்டியை சுமந்து சென்ற கூட்டத்தினரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.