சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்துக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70+ கிலோ மீட்டருக்கு மேல் பல இடங்களில் வீசி வருகிறது.