ஹைதராபாத்: மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்துவிட்டது. தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு ஒடிசா மாநிலத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் கலந்துக் கொள்வதற்காக மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர்.