புதுடெல்லி: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கான அமெரிக்காவின் நிதியுதவி குறித்த சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன என்றும், மத்திய அரசு அது குறித்து விசாரித்து வருகிறது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் (எஸ்ஆர்சிசி) நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்வதற்கான அமெரிக்க நிதியுதவி குறித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரதமரின் பொருளாதார ஆலேசானைக் குழு உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், "ட்ரம்ப் நிர்வாகத்தினரால் சில வெளியிடப்பட்டிருக்கும் இந்த தகவல்கள் கவலை அளிக்கக்கூடியவை. இந்தியாவில் சில (தேர்தல்) முடிவுகள் அல்லது கண்ணோட்டத்தை நிறுவும் உள்நோக்கத்துடன் அவை செயல்படுத்தப்பட்டதாக தெரிகிறது.