
பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா 4-வது சுற்றில் டைபிரேக்கரில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
அதேவேளையில் மற்ற இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா ஆகியோர் டை பிரேக்கரில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

