
பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தத் தொடரில் நேற்று 3-வது சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் ஷம்சிதீன் வோகிடோவுடன் மோதினார். இதில் அர்ஜூன் எரிகைசி 30-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

