சென்னை: பெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணமாக ஒன்றிய அரசு ரூ.944 கோடி மட்டும் கொடுத்து வஞ்சித்துவிட்டது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்தார். ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கினார். பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது
புயல் நிவாரண நிதியாக முதலமைச்சரிடம் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளோம். விசிக எம்.எல்.ஏ.க்கள் 4பேர், எம்.பி.க்கள் 2 பேர் நிவாரண நிதி வழங்கி உள்ளனர். ரூ.2475 கோடி புயல் நிவாரணம் வழங்க ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. வழக்கம்போல் ஒன்றிய அரசு ரூ.944 கோடி மட்டும் கொடுத்து வஞ்சித்துவிட்டது.
ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் – திருமாவளவன் விளக்கம்
கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை மீறி தொடர்ச்சியாக ஆதவ் அர்ஜுனா எதிர்மறையாக செயல்பட்டு வருகிறார். விசிக தலைமை நிர்வாகக் குழுவில் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
விஜயுடன் எந்த சர்ச்சையோ சிக்கலோ ஏற்பட்டதில்லை
விஜய் பங்கேற்ற விழாவில் பங்கேற்காதது, நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் முன்பு ஆதவ் அர்ஜுனா என்னிடம் பேசினார். விழாவில் அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்திருந்தேன். என்னுடைய அறிவுறுத்தலை மீறி ஆதவ் அர்ஜுனா பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் எதிர்காலத்தை முடிவில் கொண்டே ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.
The post ஃபெஞ்சல் புயல்; ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டது: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.