சென்னை: ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ள பாதிப்பில் பள்ளி மாணவர்களின் பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள், பைகள், சான்றிதழ்கள் ஆகியவை சேதம் அடைந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் களத்தில் ஆய்வு செய்து அதுதொடர்பான புள்ளி விவரங்களை பள்ளி கல்வித்துறை வசம் ஒப்படைத்தனர்.
அதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் தமிழ் வழி பாடநூல்களை 3,447 மாணவர்களும், ஆங்கில வழி பாடநூல்களை 1,865 மாணவர்களும் என மொத்தம் 5,312 பேர் இழந்துள்ளனர்.