விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் வீடுர் அணை திறக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாணவ – மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.