மீரட்: உத்தர பிரதேசம் அலிகர் நகரில் அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து 2022-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது 12 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக தப்பால் காவல் நிலையத்தி்ல் அடையாளம் காணப்பட்ட 69 பேர் மற்றும் அடையாளம் காணப்படாத 450 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்தை வசூலிக்கும் உ.பி.யின் 2020-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் மீரட் மண்டல இழப்பீடுகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அடையாளம் காணப்பட்ட 69 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பாயம் அறிவித்தது. மேலும் இவர்களிடம் இருந்து ரூ.12,04,831 வசூலிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.