குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்காக 2 மணி நேர இடைவெளி விடும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அசாம் சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏ-க்கள் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்காக, 2 மணி நேரம் இடைவேளை விடும் நடைமுறை இருந்து வந்தது. இந்த முறை முதல்வர் சையது சாதுல்லா தலைமையிலான ஆட்சியின்போது கடந்த 1937-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.