அஜித் பிறந்த நாளான மே 1 அன்று ரீ-ரிலீஸ் ஆகிறது ‘வீரம்’. இதற்கான புதிய டீசரை அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ளார். அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மே 1-ம் தேதி ‘வீரம்’ படமும் மறுவெளியீடு செய்யப்படுகிறது. அஜித் பிறந்த நாளன்று வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள். இதற்கான டீசரை அர்ஜுன் தாஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
‘வீரம்’ டீசர் வெளியீடு தொடர்பாக அர்ஜுன் தாஸ் “வாழ்க்கை முழுமையானதாக நினைக்கிறேன். இதே படத்தின் டீசரை 11 ஆண்டுகளுக்கு பின்பு யூடியூப் தளத்தில் ஏற்றும் பணியை செய்தேன். இப்போது அந்தப் படத்தின் புதிய டீசரை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.