அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இரண்டரை நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்துவிட்டது. இதன் மூலம் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 1-1 என்ற நிலையில் சமநிலை வகிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் வெள்ளிக்கிழமை (டிச.6) தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 337 ரன்களை குவித்தது.