ஷாகித் கபூர் நடிக்கவுள்ள புதிய படத்தினை அட்லீ தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
‘பேபி ஜான்’ தயாரிப்பைத் தொடர்ந்து, தான் இயக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகளை கவனித்து வருகிறார் அட்லீ. இதனிடையே தனது அடுத்த இந்தி தயாரிப்பையும் முடிவு செய்துவிட்டார். அதில் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் இந்தப் பேச்சுவார்த்தை முடிவு பெறவில்லை என்பதால், அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறார்கள்.