புதுடெல்லி: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு புதிய பதவி அளிக்கப்பட உள்ளது. கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (பிஜேஒய்எம்) தேசிய தலைவராக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.
கர்நாடகா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை (40). தனது பணியில் 'கர்நாடகா சிங்கம்’ என பெயரும் பெற்றிருந்தார். கடந்த 2017-ல் திடீரென பாஜகவில் இணைந்தவருக்கு எவரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாடு பாஜக தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது.