அதர்வா நடிக்கும் படத்துக்கு ‘இதயம் முரளி’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இதில் அதர்வா நாயகனாக நடித்துள்ளார்.
இதன் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ வெளியீடு எப்போது என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. இப்படத்துக்கு ‘இதயம் முரளி – தி ஒன் சைட்’ எனப் பெயரிடப்பட்டு படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.