மும்பை: தொழிலதிபர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா திருமணம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வழக்கமாக தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் இல்ல திருமணம் என்றால் அதில் பல துறை பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்வில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் மட்டுமல்லாது உலக நாடுகளில் இருந்து முக்கிய நபர்கள் பலர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.