சென்னை: “அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். இன்றைக்கு பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளையொட்டி, அவரின் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.