அதிமுக அமைப்புச் செயலாளராக மைத்ரேயன், முல்லைவேந்தன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் கோவை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி ஆகியோர் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.