சென்னை: அதிமுகவுடன் பா.ஜ.க. பேசினாலே தேர்தல் கூட்டணி அமைந்துவிடும் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில்,அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் பா.ஜ.க. பேசினாலே தேர்தல் கூட்டணி அமைந்துவிடும்.
யார் வீட்டில் பணம் இருக்கிறதோ, அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.ரெய்டு மூலம் மிரட்டி கூட்டணிக்கு பணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னதாக கடந்த 2019 மற்றும் 2021 மக்களவை தேர்தலில் கூட்டணியாக அதிமுக – பாஜக களமிறங்கி இருந்த நிலையில், ரெண்டு கட்சிகளுக்கு இடையே நிலவிய கருத்து முரண் காரணமாக கூட்டணி முறிந்ததும் குறிப்பிடத்தக்கது.
The post அதிமுகவுடன் பா.ஜ.க. பேசினாலே தேர்தல் கூட்டணி அமைந்துவிடும்: நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.