தர்மபுரி: அது என்ன பாலியல் வழக்கு, பாலியல் வழக்கு… வயசுக்கு வந்த பிள்ளையை தூக்கிட்டு போய் சோளக்காட்டில் கற்பழிச்ச மாதிரி கதறுறீங்க… என்று சீமான் அளித்து உள்ள சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரியில் நேற்று நடந்த நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அது என்ன பாலியல் வழக்கு, பாலியல் வழக்கு… அது யாரு, அந்த பொம்பளை யாரு, அது ஒண்ணு சொல்லி விட்டால் அது குற்றமாகுமா?, ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவார்கள்.
விசாரிக்கணும்லா. விசாரிக்காமலே உறுதி செய்யாமலே போயிட்டுருந்தால் என்ன அர்த்தம். என்னமோ வயசுக்கு வந்தவுடன் குச்சிலிருந்த பிள்ளையை தூக்கிட்டு போய் சோளக்காட்டில் வைத்து குண்டு கட்டாக கற்பழித்து விட்ட மாதிரி கதறிட்டு இருக்கிறீங்க எல்லாரும். உங்கள் மனநிலை என்ன. இதே சீமான் ஒரு சாதாரண இயக்குனர் அவருக்கு மதிப்பில்லை. படங்களும் இல்லை, வீட்ல இருக்கேன். அப்போ வழக்கு போடுவியா?.
என்ன பார்த்து நடுங்கிட்ட. என்ன சமாளிக்க முடியல. என்ன செய்யணும்னு தெரியல. நான் எடுத்து வைக்கும் கருத்துக்கு என்னோட மோதி ஜெயிக்க முடியல. அப்பப்போ ஒவ்வொரு பொம்பளைய முன்னாடி வந்து நிறுத்துற. என்ன காரணம் சொல்லு. என்ன நடக்குது சொல்லு என்னமோ அப்படி கல்லூரியில் படித்திருக்கிற பிள்ளையை விருப்பமே இல்லாம கடத்திட்டு போயி கற்பழித்து விட்ட மாதிரி. என்னங்கடா உங்கள் நாடகம், என்ன விளையாட்டு பண்றீங்களா?. என்ன பாலியல் வழக்கு? முதல்ல அந்த பொம்பளை யாரு? அது சொல்லிட்டா குற்றமாயிருமா?. புகார் கூறி அந்த நடிகையை நேருக்கு நேர் சந்திக்க தயார். வர சொல்லுங்க. அப்படியே அவங்கள வர சொல்லிட்டு, என்னை கூப்பிடனும். 2 நாட்களுக்கு முன்பு நான் பேசவில்லை.
சந்திக்க வாங்கனு அவங்க கூப்பிட்டு இருக்காங்க. அதற்கு அப்புறம் அவங்க தொடர்புக்கு வரவில்லை. பெரிய கட்சி நான் தான். நானா நீயான்னு பார்த்தா நான் தான் பெரிய தலைவன். நீங்க எத்தனை வழக்கு, எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அஞ்சுகிற ஆள் நான் கிடையாது. பயப்படுற ஆள் கிடையாது. குண்டு வைக்கிறது, பெட்ரோல் குண்டு வீசுவது, நிஜக் குண்டு வீசும் போது என் தலைவனை சந்தித்தவன்.
நீலாங்கரை இன்ஸ்பெக்டர் எங்க அண்ணன் எஸ்பியாக பணியாற்றிய போது பல தடவை பார்த்திருக்கிறேன். எங்க வீட்டுக்கு பாதுகாப்புக்கு இருந்தவர் தான். நல்ல பேசுகிறவர்தான். அவங்க அப்பா இறந்ததுக்கு நாம ஒன்னும் பண்ண முடியாது. ராஜீவ் காந்தி இறந்ததுக்கு உங்களுக்கு இவ்வளவு வலி இருந்தா நாங்க 30,000 பேர் வரை இறந்து இருக்கோம். அதெல்லாம் உங்கள் யாருக்கும் தெரியுமா தெரியாதா? அதுக்கு நீங்க பழி வாங்கறீங்களா அதெல்லாம் பேசுங்க. எல்லாத்தையும் பேசுங்க தர்மம்னா நியாயம்னா எல்லாத்தையும் பேசணும். ஒரு நாட்டின் படையை அனுப்பி பாதுகாக்க போறேன்னு சொல்லிட்டு என் மக்களை கொன்று குவித்தவர் ராஜீவ் காந்தி.
அதிகபட்சமா என்னை என்ன பண்ணிருவ? என்ன வளர்த்த தலைவனின் சாக துணிந்தது சாதாரணமா இரு என்று அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கெல்லாம் பயப்படுற ஆள் இல்லை. என்னை ஜெயில்ல போடலாம். நான் பாக்காத வழக்கா?. தமிழ்நாட்டிலேயே இருக்கிற அரசியல் தலைவர்களிலேயே அதிகமான வழக்குகளை வாங்கன மகன் நான் தான். இவ்வாறு அவர் பேசினார்.
சீமான் பேட்டியளித்தபோது அவர் கட்சியின் பெண் நிர்வாகிகள் அருகில் இருந்தனர். பெண்களை அருகில் அமரவைத்துவிட்டு இவ்வளவு அநாகரிகமான முறையில் சீமான் பேசியது அவர்களை முகம் சுழிக்க வைத்தது. இது, அங்கிருந்த பெண்களின் முகத்தில் தெளிவாக தெரிந்தது. சீமானின் இந்த பேச்சை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
* நடிகையிடம் ரூ.2 கோடி பேரமா?
நடிகைக்கு ரூ.2 கோடி வரை கொடுக்க தயார்ன்னு நீங்கள் கூறியதாக ஒரு செய்தி பரவுகிறதே? மாதம் ரூ.50 ஆயிரம் கொடுத்ததாக சொல்கிறார்களே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு சீமான், ‘சொல்லிக்க வேண்டியதுதான். ஏதேதோ சொல்லிக்க வேண்டியதுதான். நானே தெருக்கோடியில் நின்னுகிட்டு இருக்கேன் அப்புறம் என்கிட்ட ரூ.2 கோடி எங்க இருக்கு. எங்க வீட்ல வேலை செஞ்ச ஒரு பையனை பிடிச்சு அழுது அழுது குரல் செய்தியில் கேட்டுச்சு.
சரி கொடுத்து உதவுங்கன்னு தம்பிமார்களிடம் சொன்னேன். உங்களுக்கு அந்த குரல் செய்தி கூட அப்புறம் காமிக்கிறேன். அந்த குரல் செய்தி கேட்டால், நீங்க கூட காசு குடுப்பீங்க. உதவி என்று கேட்கும் போது கொடுத்து தொலைகிறதுதான். அவங்களுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. கேட்டவுடன் சரின்னு கொடுத்தோம். ரெண்டு மூணு மாதம் தம்பிகள் கொடுத்து உதவி செஞ்சாங்க’ என்றார்.
* ‘7 முறை கருக்கலைப்பு சாதனையாளர் நான்தான்’
சீமான் பேட்டி அளிக்கும் போது, 7 முறை கருக்கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டி உள்ளாரே? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு சீமான், ‘நடிகையை அச்சுறுத்தி நான் 7 முறை கருக்கலைப்பு செய்தேனா? அது உண்மையென்றால் அதுவும் ஒரு சாதனையே. ஓராண்டில் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய முடியுமா? அப்படி செய்திருந்தால் அந்த சாதனையாளரும் நான்தான். அதுவும் சிறையில் இருந்துகிட்டே கருக்கலைப்பு செய்தது நானாதான்’ என்று சிரித்து கொண்டே பெருமையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், திருமணம் ஆயிடுச்சின்னா, அதற்கான சான்றுகளை காண்பிக்க முடியுமா?. முதன் முதலில் நீங்கள் அளித்த புகாரில் திருமணம் ஆயிடுச்சு என கூறவில்லை. இரண்டாவது புகாரிலும் சொல்லலியே. திருமணம் ஆனதற்கான படங்கள் காட்டணும்ல. அப்படின்னா எனக்கு திருமணம் ஆகும்போது அதை வெளியிட்டு எங்களுக்கு திருமணம் ஆயிருச்சுனு காட்டி தடுத்து நிறுத்திருக்கணும்ல. இதையே நீங்க யாரும் கேட்க மாட்டேங்கறீங்க’ என்றார்.
* ஒரு பெண் விரும்பி படுத்தால் அதற்கு பெயர் என்ன? கேட்கிறார் சீமான்
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தர்மபுரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து சென்னை செல்வதற்காக சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தார். அப்போது விஜயலட்சுமி வழக்கு குறித்த ேகள்வியால் ஆத்திரம் அடைந்து அவர் கூறியதாவது: ஒரு பெண்ணை கடத்திச்சென்று வலுக்கட்டாயமாக புணர்ந்தால் தான் அது வன்புணர்வு குற்றம். நீயே விரும்பி படுத்தால் அதற்கு பேர் என்ன? 15 வருடமாக என்னையும், என் குடும்பத்தையும், என்னை சார்ந்தவர்களையும் நீங்கள் கற்பழிக்கிறீர்கள். வன்புணர்வு செய்கிறீர்கள். எங்களது மனநிலை எப்படி இருக்கும்? ஒரு பொம்பள என்ன செய்கிறார் என்று தெரியாமலேயே நீங்களும் செய்தி போடுறீங்க.
நான் இருக்கும் உயரம் தான் இதுக்கு காரணம். நான் சாதாரண திரைப்பட இயக்குநராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது. நான் இருக்கும் உயரம் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. பதற்றத்தை ஏற்படுத்துது. நடுக்கத்தை உண்டாக்குது. இதனால் தான் அந்த பொம்பளையை கொண்டு வந்து நிறுத்துறீங்க. வீரன் என்றால் என்னுடன் நேருக்கு நேர் நின்று சண்டை போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அது என்ன பாலியல் வழக்கு, பாலியல் வழக்கு…வயசுக்கு வந்த பிள்ளையை தூக்கிட்டு போய் சோளக்காட்டில் கற்பழிச்ச மாதிரி கதறுறீங்க…சீமான் சர்ச்சை பேட்டி appeared first on Dinakaran.